Loading . . .




தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

The Forecast 1 year ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

ஜூன் 24-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், துறைகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள், புதிய அறிவிப்புகளை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசின் முக்கியமான 16 துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப ஜூன் 11 முதல் 15 வரை மூன்று நாட்களில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர் ஆட்சியர்கள் ஜூன் 11-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூன் 13-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 15-ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சிவகெங்கை மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News