இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
The Forecast 1 year ago நீதித்துறை
சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், மற்ற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், "இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித் தொகையை எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டும்” எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments