மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு மகளிர் காவலர் அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. வழங்கினார்
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற 'அகில இந்திய மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டி' நிறைவு விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு மகளிர் காவலர் அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அகில இந்திய காவல் விளையாட்டு கட்டுப்பாடு வாரிய சிறப்பு இயக்குநர் R.A.சந்திரசேகர், இ.கா.ப., பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் B. பாலநாக தேவி, இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments