இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்
The Forecast 1 year ago கிரிக்கெட்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இந்நிலையில் , நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், 53 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்கள்), ராகுல் திராவிட் (13,265 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122 ரன்கள்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
0 Comments