சாதனை எல்லாம் கை மாறும் தருணம் : இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதல் அணியாக முன்னேறியது
The Forecast 2 years ago கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 397 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டினை இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.
இப்போட்டியில் , ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தார். மேலும் . நாடு முழுவதும் கோலிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
இந்நிலையில், பெருமைகளும் சாதனைகளும் அடுத்த தலைமுறைக்கு கை மாறும் தருணம் அற்புதமானது என்று இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்தியுள்ளார்.
0 Comments