ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது 2-0 என முன்னிலை .
The Forecast 2 years ago கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி உறுதியாக உள்ள நிலையில், போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விறுவிறுப்பாக இருக்கும் இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும்.
0 Comments