Loading . . .




நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023, போட்டிகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் முதல் 3 இடங்களை பிடித்தது

The Forecast 2 years ago கிரிக்கெட்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 நிறைவு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் ஆகியோருடன் ஒட்டுமொத்த தொடரில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., ஒன்றிய அரசின் விளையாட்டு செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி,இ.ஆ.ப., இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், இ.வ.ப., ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்கேட்டிங் வீராங்கனை டாக்டர் ஆர்த்தி கஸ்தூரி ராவ் ஆகியோர் உடனிருந்ததனர்.

மேலும் கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.



0 Comments

Post your comment here

கிரிக்கெட் Relateted News