Loading . . .




வங்கதேசத்தின் புதிய பிரதமராக, வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அவர்களின் வாரிசான தாரிக் ரஹ்மான் பதவியேற்க உள்ளார்

The Forecast 2 months ago தேசிய செய்திகள்

வங்கதேசத்தின் புதிய பிரதமராக, வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அவர்களின் வாரிசான தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான பதவியேற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு தெற்கு பிளாசாவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவையின் பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வு, வங்கதேசத்தின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. புதிய பிரதமர் தலைமையில் நிலைத்த ஆட்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு வலுப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News