ரஷ்யா நாட்டின் சைபீரியா பகுதியில் 24,000 ஆண்டுகள் உறைந்திருந்த நுண்ணுயிரியை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்துள்ளனர். Bdelloid Rotifer என அழைக்கப்படும் இந்த உயிரி, பனிக்கட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஆய்வகத்தில் இதமான வெப்பநிலையில் வைக்கப்பட்டபோது, இந்த பலசெல் நுண்ணுயிரி மீண்டும் செயல்படத் தொடங்கியது. குறுகிய காலத்திலேயே பாலினமில்லா இனப்பெருக்கம் மூலம் பல பிரதிகளை உருவாக்கியது. இது நீண்டகாலம் உறைந்த நிலையிலும் உயிர் நிலையை தக்கவைத்திருந்தது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நுண்ணுயிரி நன்னீரில் வாழக்கூடியது. இதில் நரம்புகள், தசைகள் மற்றும் செரிமான மண்டலம் போன்ற அமைப்புகள் உள்ளன. இவ்வகை அமைப்புகள், இதன் உயிரியல் தன்மைகளை ஆராய்வதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, கடுமையான சூழ்நிலைகளில் உயிர்கள் எவ்வாறு நீண்டகாலம் உயிர்வாழ முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments