சீனா விஞ்ஞானிகள், நிலக்கரியிலிருந்து நேரடியாக மின்சாரம் உருவாக்கும் பூஜ்ஜிய கார்பன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய முறையால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் சுமார் 2 கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை தோண்டி எடுக்காமல், அதே இடத்திலேயே மின்சாரம் தயாரிக்க முடியும். எலக்ட்ரோகெமிக்கல் முறையின் மூலம் உருவாகும் மின்சாரம் கம்பிகள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது.
இந்த அணுகுமுறை, பாரம்பரிய சுரங்கத் தொழிலுக்கு மாற்றாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் நிலக்கரி சுரங்க பணிகள் குறையக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பம், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விதத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது. மேலும், மின்சாரம் உற்பத்தியில் சுத்தமான முறைகளை முன்னெடுக்க உதவக்கூடும்.
இந்த கண்டுபிடிப்பு, எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
0 Comments