நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பயணம்.
The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் சீரமைக்கப்பட்டு வருவதையும் , அதன் பிறகு திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட செலவாணி சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தில், குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே எல்லீஸ் சமுத்திரத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்டார்.
பிறகு விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் மின் தகன கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு UGS நீரேற்றும் நிலையத்திற்கு சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கடலூர் மாவட்டம், அரியாங்குப்பம் ஊராட்சி எம்.புதூர் பகுதியில் புதிதாக மாநகரப் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் அருகில் மழைநீர் சேகரிப்பு வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
பிறகு கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
0 Comments