மரக்கன்றுகள் நடவு செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆய்வு
The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-157க்குட்பட்ட அடையாறு
ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.05.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,
தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவன தலைமைச் செயல் அலுவலர் .எம்.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள்
டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள், திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) அவர்கள், மண்டல அலுவலர், சென்னைப்
பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
0 Comments