Loading . . .




விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூர் அருகே பழுதடைந்த பாலம் அமைச்சர்கள் ஆய்வு

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

(3.8.2022) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்தூர் சுங்கச் சாவடியினை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூர் அருகே பழுதடைந்த பாலத்தினை  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்

மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.த.மோகன், இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் என். ஸ்ரீநாதா, இ.கா.ப. தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர்

திரு.சைதன்யா, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் திரு.பாலமுருகன், திரு.சந்திரசேகர் மற்றும் கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.


0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News