இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 60 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டக
The Forecast 3 years ago விருதுநகர்
இராஜபாளையம் தொகுதியில்* இன்று (12.10.2022) காலை 11 மணியளவில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 60 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகத்தை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களுக்கு வித்யாசமாகவும் சிறப்பாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அதில் இச்சிறப்பான திட்டமும் அடங்கும் எனவும் விருதுநகர் மாவட்டத்திலே அதிகளவில் மாதம் 250 குழந்தைகளை சிறப்பான முறையில் பெற்றெடுக்க உறுதுணையாக இருக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் MLA அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா வார்டு செயலாளர் மாயாவிமுருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments