Loading . . .




பெரியவர்களும் இல்லை. சிறியவர்களும் இல்லை. எல்லோரும் ஊழியர்கள்தான். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

The Forecast 3 years ago காங்கிரஸ்

புது தில்லி,

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதையடுத்து அக்கட்சியின் முழுநேர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது.

மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 9,500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு நேற்று வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஓட்டுப் பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பான பெட்டக அறையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதையடுத்து, காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரு இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் தலைவராக வந்துள்ளரர்.

 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே வரும் அக்டோபர் 26ம் தேதி பொறுப்பேற்பார் என காங்கிரஸ் எம் பி ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வகுப்புவாதம் என்ற போர்வையில் ஜனநாயக நிறுவனங்களை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். கட்சியில் பெரியவர், சிறியவர் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன். அவரைச் சந்தித்து கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று ஆலோசித்தேன்" என கூறினார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் (ஏஐசிசி) உத்தரப் பிரதேசத்தின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News