Loading . . .




மாநகராட்சி, நகராட்சி புதிய நிர்வாக ஆணை - கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப

The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

பணியமைப்பு - தமிழ்நாட்டிலுள்ள 20 மாநகராட்சிகள் (பெருநகர சென்னை

மாநகராட்சி நீங்கலாக) - மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம்

செய்தல் - ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவித்தல் - ஏற்கெனவே

உள்ள பணியிடங்களை மறுசீரமைத்தல் மற்றும் முறைப்படுத்துதல் - ஆணை -

வெளியிடப்படுகிறது.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை

அரசாணை (நிலை) எண்.152

நாள்.20:10.2022

சுபகிருது, ஐப்பசி - 3

திருவள்ளுவர்ஆண்டு -2053

படிக்கப்பட்டது

1. அரசாணை (நிலை) எண் 237, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்

வழங்கல் துறை, நாள் 26.09.1996

2. அரசாணை (நிலை) எண் 241, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்

வழங்கல் துறை, நாள் 01.10.1996

3. அரசாணை (நிலை) எண் 140, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர்

வழங்கல் துறை, நாள் 27.05.1997.

4. நகராட்சி நிருவாக இயக்குநரின் கடித ந.க.எண்.6353/மாநஅ.1/

2022-2, நாள் 14.07.2022 மற்றும் 17.08.2022.

ஆணை:


மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் பெருநகர சென்னை

மாநகராட்சி தவிர, இதர மாநகராட்சிகளுக்கான "தமிழ்நாடு மாநகராட்சி பணி

விதிகள் 1996" உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் 01.10.1996 முதல்

நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்படி அரசாணையில், நகராட்சிகள்

உயர்த்தப்படும்போது, மாநகராட்சிகளில்

தோற்றுவிக்கப்படாத நகராட்சிப்

பணியிடங்களை மாநகராட்சிப்

பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும்,

பொது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிகளாக

தரம்

2.மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மாநகராட்சிகளில்

வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்க ளை மறுசீரமைத்தல்

தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு


மாநகராட்சியும் பின்வரும் நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம்

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:-

 பணியாளர் பிரிவு

(Personnel Wing)

வருவாய் மற்றும் கணக்கு பிரிவு

(Revenue & Accounts Wing)

பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு

(Engineering & Water Supply Wing)

பொது சுகாதாரப் பிரிவு

(Public Health Wing)

 மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு

மாநகராட்சிப் பணி விதிகள் 1996 தொடர்பாக பல்வேறு சங்கங்கள் மற்றும்

மாநகராட்சிப் பணியாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தெளிவுரைகள்

வெளியிடப்பட்டது.

மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட, அரசுக்கு அனுப்பிய நகராட்சி

நிருவாக இயக்குநரின் கருத்துருவில், தமிழ்நாட்டிலுள்ள 20

மாநகராட்சிகளின் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள்

தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே

பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கெனவே உள்ள பணியிடங்களை

மறுசீரமைத்து முறைப்படுத்துவது தொடர்பாக கீழ்க்காணும் விவரங்களை

தெரிவித்துள்ளார்:-

i. தமிழ்நாட்டில் தற்போது (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக)

மொத்தம் உள்ள 20 மாநகராட்சிகள் பல்வேறு காலகட்டங்களில்

உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது நகராட்சி 

நிருவாக இயக்குநரகத்தின் கீழ் 20

மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் தற்போதைய

நிலவரப்படியான மக்கள் தொகை 

குறிப்பிடப்பட்டுள்ளது

குறிப்பிடப்பட்டுள்ள மாநகராட்சிகளின்

தற்போதைய நிலவரப்படியான மக்கள் தொகைக்கு ஏற்றவாறு,

மாநகராட்சி பணியிடங்கள் ஒரே சீராக இல்லை. மேலும், சிறப்பு நிலை

நகராட்சிகளிலிருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி,

திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், தஞ்சாவூர் முதலான

மாநகராட்சிகளில், சில சிறப்பு நிலை நகராட்சிகளில் காணப்படும்

பணியிடங்களுக்கும் குறைவான பணியிடங்களே உள்ளன. மேலும்,

புதிதாக மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர்,

காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், கும்பகோணம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும்

சீரான நிர்வாகம் மற்றும் திட்டப் பணிகள் செயல்படுத்துதல், நகரமைப்புப்

பணிகள் மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் பொது சுகாதார பணிகள்

மேற்கொள்ளுதல். பொதுமக்கள் சேவை மேம்படுத்துதல், வருவாய்

பெருக்குதல் ஆகியவற்றை தொய்வின்றி செயல்படுத்த போதுமான

பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது.

எனவே, மேற்படி 20 மாநகராட்சிகளை அவற்றின் மக்கள்

தொகையின் அடிப்படையில் பின்வருமாறு நான்கு வகைகளாக

வகைப்படுத்தி, அவற்றிற்கு ஏற்ற நிலையினை கீழே

அட்டவணை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு நிர்ணயம் செய்யலாம் என

நகராட்சி நிருவாக இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.



மேற்கண்டவாறு வகைப்படுத்தப்படவுள்ள

தாம்பரம் மாநகராட்சி தற்போது (2021 தோராய மக்கள்

9,60,887 மக்கள் தொகையைக் கொண்டுள்ளபோதிலும், அதனைச் சுற்றியுள்ள

சில ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியின் எல்லையை

விரிவாக்கம் செய்ய அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி,

இவ்வூராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்போது தாம்பரம்

மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை பத்து இலட்சத்திற்கு மேல் உயர

சாத்தியம் உள்ளது. எனவே, தாம்பரம் மாநகராட்சியை 10 இலட்சத்திற்கும் மேல்

மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

மாநகராட்சிகளில்,

தொகையின்படி)

 இதேபோன்று, தஞ்சாவூர் மாநகராட்சி தற்போது (2021 தோராய மக்கள்

தொகையின் படி) 2,69,450 மக்கள் தொகையை கொண்டுள்ள போதிலும்,

அதனைச் சுற்றியுள்ள சில கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து, தஞ்சாவூர்

மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய அரசுக்குக் கருத்துரு

அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வூராட்சிகளும் மாநகராட்சியுடன்

இணைக்கப்படும்போது தஞ்சாவூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை

ஐந்து இலட்சம் வரை உயர சாத்தியம் உள்ளது. எனவே, தஞ்சாவூர்

மாநகராட்சியை ஏற்கனவே உள்ளது போல் 3 முதல் 5 இலட்சம் வரை மக்கள்

தொகை கொண்ட மாநகராட்சிகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

 தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வகைப்படுத்தப்படவுள்ள

மாநகராட்சிகளில் உத்தேச புதிய வரையறையின்படி புதிய பணியிடங்கள்

தோற்றுவிக்கவும், ஏற்கெனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்கவும்

மற்றும் முறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 



 தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, நான்கு வகைகளாக

வகைப்படுத்தப்படவுள்ள 20 மாநகராட்சிகளில், 10 இலட்சம் மற்றும் அதற்கு

மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 6 மாநகராட்சிகளில், புதிய பணியிடங்கள்

தோற்றுவிப்பதற்கான உத்தேச வரையறை (Norms) உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் சுமார் 15

இலட்சம் மக்கள் தொகை உள்ளதால், அந்த மூன்று மாநகராட்சிகளுக்கு

பணியாளர்கள் அமைப்பு சற்று கூடுதலாகவும், மற்ற 3 மாநகராட்சிகளான

திருச்சிராப்பள்ளி, தாம்பரம் மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் 15

இலட்சத்திற்கு குறைவாக உள்ளதால், பணியாளர்கள் அமைப்பு சற்று

குறைவாகவும் இறுதி செய்ய

உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 முதல் 10 இலட்சம் மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகள், 3

முதல் 5 இலட்சம் மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகள் மற்றும் 3

இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின்

பணியாளர்கள் அமைப்பு தனித்தனியே கீழே அட்டவணை 4 முதல் 10 வரை

குறிப்பிடப்பட்டுள்ளது.

 மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் அனைத்து

பணியிடங்களுக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியன அந்தந்த

மாநகராட்சிகளின் பொது நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது. மேலே விவரிக்கப்பட்ட சூழ்நிலையில், நகராட்சி நிருவாக இயக்குநர்

பின்வருவனவற்றிற்கு தக்க உத்தரவு வழங்குமாறு அரசினை கேட்டுக்

கொண்டுள்ளார்.

மேலே  குறிப்பிட்டுள்ளவாறு மேற்படி 20

மாநகராட்சிகளை (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) அவற்றின்

மக்கள் தொகையின் அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்தவும்,

அவற்றிற்கு ஏற்ற நிலையினை நிர்ணயம் செய்யவும்;

 மேலே 

 குறிப்பிட்டுள்ளவாறு,

தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளில் தற்போதைய மக்கள்

தொகைக்கேற்ப, ஒரே சீரான பணியிடங்களை தோற்றுவித்து ஏற்கனவே உள்ள

பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்தவும்; குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்கள்

தொகைக்கேற்ப 20 மாநகராட்சிகளை நான்கு வகையாக வகைப்பாடு செய்து.

அம்மாநகராட்சிகளில்

புதிய வரையறையின்படி புதிதாக

தோற்றுவிக்கப்படவுள்ள பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள

பணியிடங்களை மறுசீரமைத்து முறைபடுத்தப்படும் பொருட்டு 4,145

பொருட்டு

பணியிடங்களை அனுமதிக்கவும்;

மேற்படி அட்டவணை 4 முதல் 10-ல் குறிப்பிட்டுள்ள வரையறைக்கு

(NORMS) மிகையான பணியிடங்களில் கூடுதலான எண்ணிக்கையில்

பணிபுரியும் பணியாளர்களை, அதே பணியிடம் காலியாக உள்ள

மாநகராட்சிகளுக்கு பணிநிரவல் (re-deployment) மூலம் பணியிட மாற்றம்

செய்யவும்;

பிற தற்போது அனுமதிக்கப்படும் பணியிடங்களைத் தவிர, ஏற்கெனவே

நிரந்தரப் பணியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள். துப்புரவு பணி

மேற்பார்வையாளர்கள்,ஓட்டுநர்கள், செயல் திறனற்ற மற்றும் செயல் திறன்

பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக்காவலர், தரவு உள்ளீட்டாளர்,


தட்டச்சர், வரி வசூலர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகியோருக்கு அவர்கள்

ஓய்வுபெறும் காலம் வரை மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கவும்,

அப்பணியாளர்கள் ஓய்வுக்குப் பிறகு, அப்பணியிடங்களை நிரப்பாமல் எதிர்வரும்

காலங்களில் இப்பணிகளை (Services) வெளிமுகமை மூலம் (Out Sourcing as

Services) மேற்கொள்ளலாம்.

மாநகராட்சி ஆணையர் பணியிடம், காலிப்பணிடமாக அமையும்

நேர்வில், அம்மாநகராட்சியின் துணை ஆணையருக்கோ அல்லது அண்டை

மாநகராட்சியின் ஆணையர் அல்லது துணை ஆணையருக்கோ அல்லது

கூடுதல் / இணை இயக்குநர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கோ,

ஆணையர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும்,

மாநகராட்சியின் தலைமை பொறியாளர் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த

அலுவலர்களுக்கு ஆணையர் பொறுப்பு வழங்கப்படக் கூடாது.

6. மேற்கூறிய சூழ்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் சீரான

நிருவாகத் திறனை மேம்படுத்தவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து

வகையான அடிப்படை சேவைகளை உரிய நேரத்தில் வழங்கவும் மற்றும்

அரசின் திட்டப்பணிகளை தொய்வின்றி செயல்படுத்துவதை உறுதி செய்யும்

நோக்கில், நகராட்சி நிருவாக இயக்குநரின் கருத்துருவினை விரிவாக

பரிசீலனை செய்து, பரிசீலனைக்குப் பின் அதனை ஏற்று, பின்வருமாறு அரசு

ஆணையிடுகிறது:-

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் 2021ஆம் ஆண்டின் தோராய

மக்கள் தொகைக்கேற்ப, 20 மாநகராட்சிகளை (பெருநகர சென்னை

மாநகராட்சி நீங்கலாக) பிற்சேர்க்கை - 1ல் உள்ளவாறு நான்கு

வகைகளாக வகைப்படுத்தி அவற்றின் ஏற்ற நிலை நிர்ணயம்

செய்யப்படுகிறது.

வரையறை

மேற்படி மாநகராட்சிகளின் வகைபாட்டிற்கேற்ப பணியிடங்களின்

(NORMS) மற்றும் புதிய வரையறையின்படி,

20 மாநகராட்சிகளில் பிற்சேர்க்கை 2 முதல் 8 வரை உள்ளவாறு புதிய

மற்றும் ஏற்கெனவே உள்ள

மறுசீரமைத்து முறைபடுத்தி, மொத்தம் 3,417

அனுமதிக்கப்படுகிறது. இதற்கான ஆண்டுச்

அந்தந்த மாநகராட்சியின் நிதியிலிருந்து

பணியிடங்கள்

தோற்றுவித்து

பணியிடங்களை

பணியிடங்கள்

செலவினத்தை

மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட 3,417 பணியிடங்களின் சுருக்க விவரங்கள்

மாநகராட்சி வாரியாக பிற்சேர்க்கை 9-ல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,

இப்பணியிடங்களின் ஊதிய விகித விவரங்கள் பிற்சேர்க்கை 10-ல்

கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அனுமதிக்கப்படும்

பணியிடங்களைத் தவிர,

ஏற்கெனவே நிரந்தரப் பணியிடத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப்

பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல்

திறன் மற்றும் செயல் திறனற்ற

திறனற்ற பணியாளர்கள்,

பணியாளர்கள், அலுவலக

உதவியாளர்கள், இரவுக்காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள்,

தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர்

ஓய்வுபெறும் வரையிலோ அல்லது அப்பணியிடம் காலிப்பணியிடமாகும்

வரையிலோ, அவர்களுக்கு அம்மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம்

வழங்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு, அப்பணியிடங்களை நிரப்பக்

கூடாது. எதிர்வரும் காலங்களில் இப்பணிகளை (Services) வெளிமுகமை

மூலம் (Out Sourcing as Services) மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலே 6-ல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களைத் தவிர,

இவ்வரசாணையில் குறிப்பிடப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருப்பின்,

அப்பணியிடங்களில் முறையான ஊதிய விகிதங்களில் பணிபுரிந்து வரும்

பணியாளர்கள், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை பணிபுரிய

அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்குப் பிறகு அப்பணியிடங்கள் நிரப்பப்பட

கூடாது.

பிற்சேர்க்கை-2 முதல் 8-ல் குறிப்பிட்டுள்ள வரையறைக்கு (NORMS)

மேல், மிகையாக உள்ள பணியிடங்களில் கூடுதலான எண்ணிக்கையில்

பணிபுரியும் பணியாளர்களை அதே பணியிடம் காலியாக உள்ள பிற

மாநகராட்சிகளுக்கு பணிநிரவல் (redeployment) மூலம்

நிரப்பப்படவேண்டும்.

 மாநகராட்சி ஆணையர் பணியிடம், காலிப்பணிடமாக அமையும் நேர்வில்,

அம்மாநகராட்சியின் துணை ஆணையருக்கோ அல்லது அண்டை

மாநகராட்சியின் ஆணையர் அல்லது துணை ஆணையருக்கோ

அல்லது கூடுதல் / இணை இயக்குநர் நிலையில் உள்ள

அலுவலர்களுக்கு மட்டுமே ஆணையர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

மேலே அனுமதிக்கப்பட்ட 3,417 பணியிடங்களில், புதிதாக

தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் இதனால் ஏற்படும்

காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குண்டான உரிய நடவடிக்கையினை

எடுக்குமாறு நகராட்சி நிருவாக இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்.

19 7. இந்த ஆணை நிதித் துறையின் அ.சா.எண் 46251/CMPC/2022, நாள் 19.10.2022-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது என் அரசு நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News