Loading . . .




காங்கிரஸ் தலைவர் கார்க்கே பதவி ஏற்பு

The Forecast 3 years ago காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கும் விழாவில், தலைவர் பதவியை கார்கே ஏற்கிறார். இதில், கட்சியின் தற்போதைய இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்று, தலைவர் பதவிக்கான பொறுப்பை கார்கேவிடம் ஒப்படைக்க உள்ளார். அதற்கு முன்பாக, தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கார்கேவிடம், காங்கிரஸ் தேர்தல் ஆணையராக பணியாற்றிய மதுசூதன் மிஸ்திரி வழங்க உள்ளார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News