தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட ஆணையத்துக்கு அதிகாரமில்லை -காங்கிரஸ்
The Forecast 3 years ago காங்கிரஸ்
கட்சிகள் இலவசங்கள் குறித்து அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட ஆணையத்துக்கு அதிகாரமில்லை என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இலவச அறிவிப்புகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இலவச அறிவிப்புகள், திட்டங்களில் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; நீதிமன்றமோ, அரசாங்கமோ கூட தலையிட உரிமையில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
0 Comments