பாஜக திட்டமிட்டே மக்கள் மீது அக்கரை இல்லாமல் எதிராக செயல்படுகிறது- கே.எஸ்.அழகிரி
The Forecast 3 years ago காங்கிரஸ்
தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இதை மூடி மறைக்கின்ற வகையில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை புகுத்துவதை நோக்கமாக கொண்டு பாஜ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
0 Comments