Loading . . .




ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கார்கே

The Forecast 3 years ago காங்கிரஸ்

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றுஅக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 'பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நாளும் பொய்யுரைத்து வருகிறார்; இதன் மூலம் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கிறார்' என்று கார்கே விமர்சித்தார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தையொட்டி,ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவருடன் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் கார்கே பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். இதில்

அவர் பேசியதாவது:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் லட்சக்கணக்கானோர்

இணைந்து வருகின்றனர். ராகுல் மற்றும் காங்கிரஸின் தலைமையில் நாட்டில் ஊழல் அல்லாத ஆட்சியை கொண்டுவருவோம். 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றார்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News