Loading . . .




இந்திரா காந்தி பிறந்தநாள்- பெண்கள் மட்டுமே பங்கேற்பு

The Forecast 3 years ago காங்கிரஸ்

இந்திரா காந்தி பிறந்தநாள்-

பெண்கள் மட்டுமே பங்கேற்பு


இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாளை நடைபெறும் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிரா சென்றுள்ளது. அம்மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள ராகுலுடன், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, பிரபல நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News