Loading . . .




எம்.எஸ்.திரவியம் சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் கே.எஸ். அழகிரி

The Forecast 3 years ago காங்கிரஸ்

சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியத்தை நியமித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்குறைவு காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது.  இருந்த போதிலும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக இழுபறி நிலை நீடித்து வந்தது. மற்ற கட்சிகளின் சார்பில் ஏற்கனவே தலைவர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News