திருப்பெரும்புதூரில் நேரு அம்பேத்கர் தேசிய சிந்தனையாளர் இணைப்பு இயக்கம் சார்பில் "எங்கே செல்கிறது நீதி" சிறப்பு கூட்டம்
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் 03-12-2022 சனிக்கிழமை அன்று ஓட்டல் பாரமண்ட் இன் அரங்கில் நேரு அம்பேத்கர் தேசிய சிந்தனையாளர் இணைப்பு இயக்கம் சார்பில் "எங்கே செல்கிறது நீதி" என்ற தலைப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தீவிரவாதிகள் விடுதலை குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட செய்தி அறிக்கை..,
CLP தலைவர் D. குருசாமி தலைமை தாங்கி பேசியது.
ராஜீவுகாந்தி கொலைக்கு காரணமானவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு சந்தேகம் என்பதில் சிறிதளவும் அளவும் இல்லை. அவர்களை பின்னின்று இயக்கியவர்கள் சந்திர. சாமியாகாலிஸ்தான் தேசிய கவுன்சில் தலைவர்களாக கருத்தப்பட்ட D.ஜெகதீஷ் சிங்கோஹு மற்றும் குருஜித்சிங் புத்சிங் வாலாவா என்ற சந்தேகமும், அவர்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் மத்திய குற்ற பிரிவும் தவறிவிட்ட்டதால் ராஜீவ் காந்தியை கொன்று குவித்த தானுவும் அவரை சார்ந்தவர்களும் குற்றம் செய்த கொலையாளிகள் என்பதிலிருந்து தப்ப முடியாது. முழுமையான விசாரணைக்கு பிறகு TADA சிறப்பு நீதிமன்றம் அளித்த 26 குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து ஏழுபேரை இறுதி படுத்தப்பட்ட கொலையாளிகள் என்று முடிவு செய்துள்ளது. கொலையாளிகள் என்று சட்டத்தின் வழியில் தீர்க்கமாக முடிவு செய்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி KM தாமஸ் அவர்களே, சி.பி.ஐ. விசாரணை குறைபாடு உடையது எனவே கருணை காட்டுங்கள் என்று காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதியது இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் மாறாத வடுவாகும்
பேரறிவாளன் வழங்கிய 9 WAT பேட்டரிதான் தானு அவரது உடலில் தாங்கிச் சென்ற வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்று இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்ற நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம், தீவிரவாதிகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் தீர்க்கமான விசாரணையை TADA நீதிமன்றம் நடத்தியதிலும் உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து முடிவு செய்வதிலும் ஏழுபேர் உறுதி செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் அவர்களது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்தும் ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநரிடம் கருணை மனு செய்தும் விடுவிக்கப்பட்ட தீவிரவாத நடவடிக்கையின் கீழ் ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை,உலகத்தலைவர்களுள் ஒருவரான ராஜீவுகாந்தியைக் கொன்ற குற்றவாளிகளை அரவணைப்பது என்பது ஒரு மாநில முதல் மந்திரிக்கு அழகல்ல.
இந்திய அரசியலமைப்பு சட்ட 164(1) வது சரத்தின் படி உறுதிமொழியை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு
பொறுப்பு வசிக்கும் தமிழக முதல்வர், ஒரு தீவிரவாத நடவடிக்கையின் மூலம்
நிகழ்த்தப்பட்ட இந்திய நாட்டின் முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை வரவேற்று வாழ்த்தி கட்டி தழுவி தேனீர் விருந்து கொடுத்தது என்பது அரசியல் நாகரீகத்துக்கும் ஆட்சி செய்யும் அரசியல் சட்டத்திற்கும் ஏற்புடைய செயல் அல்ல.
ராஜீவ் காந்தி மட்டும் அல்லாமல் அவருடன் கொல்லப்பட்ட 13 பேர்கள்படுகாயம் அடைந்த 43 பேர்கள. ஆகிய அனைவரின் உயிர்வாழும் உரிமையை பறித்த உச்ச நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்ட கொலையாளிகள்
7 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் திமுக ஆட்சிக்காலத்திலும் நிகழ்த்தப்பட்ட அரசியல் ஆதாய நடவடிக்கை அத்தகைய அரசியல் உட்நோக்கம் கொண்ட சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு ஒரு சட்டம் மரியாதை கொடுத்து ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மக்கள் மன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது .
ஒரு தீவிரவாத சதி திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரஜைகள் சேர்ந்து நடத்தி உள்ள ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து வெளிவிட உதவிய அரசமைப்பு சட்ட அதிகாரம் படைத்த அனைத்து அமைப்புகளும் குற்றமுடையன. ராஜீவ் காந்தி ஒரு சமாதான தூதர் பஞ்சாப் மாநிலத்தில்,மிஜோரத்தில், அரபு நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டு
கிளர்ச்சிகளில் தன்னை அவர் ஈடுபடுத்திக்கொண்டவர்.
ஈழத் தமிழர்களின் நிரந்தர தீர்வான
தனி நாட்டு கோரிக்கையை ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்ற வகையில் தன்னால் முன்மொழிய முடியாது என்றும் இந்திய மாநிலங்கள் அடைந்து வரும் அரசியல் நிர்ணய உரிமையை ஈழ மக்களுக்கு இலங்கை அரசிடம் பெற்றுக் கொள்ள கொடுக்க முடியும் என்றும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். 1987 ஜூலை மாதம் ஏற்பட்ட ஒப்பந்தத்தை கொழும்பில் அரசியல் ஆலோசகர் நிகழ்த்தியவர்கள் ஆவர்.
ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே கையெழுத்திட்டத்தை நான்கு நாட்கள் கழித்து யாழ்ப்பாணம்
சுடுமலை அம்மன் கோயில் திடலில்நடந்த பெரும் பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டு உரையாற்றினார். ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர் பிரபாகரனும் அவரது ஆண்டன் பாலசிங்கமும் வன்னிக்காடுகளில் சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அந்த கொலையை நாங்கள் செய்யவில்லை என உறுதிப்பட கூறாமல் மழுப்பிவிட்ட இவர்கள் ராஜீவ் காந்தி கொலையைசெய்தது மாபெரும் அரசியல் சட்டத் தவறு. என்று கூறினார்.
0 Comments