Loading . . .




பொருளாதாரம், பண்பாட்டு, ஆன்மீக ரீதியாக முன்னேறுவதற்கு புதிய தேசியக்கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

கோவை, டிச.11 கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இணையதளம் வாயிலாக கலந்து கொண்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் பேசியிருப்பதாவது:

60-களின் தொடக்கத்தில் இடம்பெற்ற பாட புத்தகங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய நாட்டிற்கு செய்த நன்மைகள் பேசப்பட்டன. ரயில்வே துறை மற்றும் சட்ட விதிகள், தேர்வு முறை ஆகியவற்றில் சிறப்பான ஒழுங்கு முறையை அவர்கள் கடைப்பிடித்தனர். இந்த இந்திய சமூகத்திலே பல்வேறு பட்ட பிரிவினர் வாழ்கிறார்கள். தொழிலாளர்கள், முதலாளிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள்,

அரசாங்கப் பணியாளர்கள் என பலதரப்பட்டோர் தேசத்தினுடைய அங்கமாக இருக்கிறார்கள். புதியக் கல்விக்

ஏற்றுக்கொண்டு அதனை பின்பற்றுவது என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். நாடு குறித்த சுவாமி விவேகானந்தரின் நம்பிக்கையை இக்கொள்கையானது நிறைவேற்றும். வேளாண்மை, தொழில்கள், தொழில்நுட்பம் கலந்த வாழ்க்கை பயணத்தில் புதிய தேசியகல்விக் கொள்கையானது மாணவர்களை தற்சார்பு உடையவர்களாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மேம்பட்டு வாழ்க்கை வாழ உதவுகிறது. கற்றல்-கற்பித்தலில் இம்மையம் தன் பங்கை மிகச் சிறப்பாக செய்ய முடியும். இவர்களில் நாட்டைக்

கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் உலக நாடுகளில் சிறந்த நாடாக இந்திய நாடு இருந்திருக்கிறது. உலகில் பல்வேறுத் தளங்களில் முன்னேறி இருந்த நாடாக இந்திய நாடு

திகழ்ந்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வணிகம் இங்கே நடைபெற்றிருக்கிறது. இங்கிருந்து அயல்நாடுகளுக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக துணி ஏற்றுமதியில் முக்கியப் பங்கினை இந்திய நாடு செய்திருக்கிறது.

பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, ஆன்மீக ரீதியாக நாம் முன்னேறுவதற்கு இந்த புதிய தேசியக்கல்விக் கொள்கை பெரிதும் உறுதுணையாக இருக்கும். இந்திய மக்கள் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், இனத்திலும் வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்கிறார்கள். இங்கு புதிய தேசியக்கல்விக்கொள்கை என்கிற கல்வி முறையும் ஒரே கல்விமுறையாக

அமையும் போது வேற்றுமையில் ஒற்றுமை என்ற அந்தக் கொள்கைக்கு மேலும் இது வலு சேர்க்கிறது. உலக தரமான வாழ்க்கையைக் கல்வியின் வழியே கொண்டு வருவது முக்கியத் தேவையாகிறது. மூளை இயங்க வைக்கும், உடல் செயல்படும் என்ற அடிப்படையிலே, மனிதநேயத்தை சிந்திப்போம். அனைத்தும்

ஒன்றே, அனைவரும் ஓரினம், இந்தியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை இந்தியா உலகிற்கு கற்பிக்கும். இந்தியா வளர்ந்த நாடு, தன்னிறைவு பெற்ற நாடு, தனித்துவமான நாடு. ஒவ்வொருவரும் சிந்திக்கிற சிந்தனையும், செயலும் நாட்டை நோக்கியதாகவே தேசப்பற்றுடனோடு இருக்க வேண்டும். மாணவர்களை கற்பித்தலின் வழியே நாட்டை நேசிக்கிறவர்களாக தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

___

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News