சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு,இவரது மனைவி மணிமேகலை ஆகியோர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு.இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 2012-ஆம் ஆண்டு தங்கம் தென்னரசு, இவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது.இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு அரசியல் காரணங்களுக்காககடந்த அதிமுக ஆட்சியில் தன் மீது அவதூறாக வழக்கு தொடரப்பட்டதால்,வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, இவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதி,இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
0 Comments