Loading . . .




இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்:

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக் கொண்டு, 14ம் தேதி (நேற்று) காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் விழா நடைபெறும் என்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது.கவர்னர் ஆர்.என்.ரவி 9.28 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் தர்பார் ஹாலுக்கு வந்தார். அவரை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். இதையடுத்து சரியாக காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, உதயநிதி ஸ்டாலினை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சராக பதவியேற்க வரும்படி உதயநிதி ஸ்டாலினை தலைமை செயலாளர் அழைத்தார். உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை 9.33 மணி அளவில் தமிழகத்தின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து தமிழகத்தில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை, தலைமை செயலகத்தின் 2வது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்ற பின்பு,  நேற்று ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், முத்துசாமி உள்ளிட்ட 10 அமைச்சர்களின் இலாகாக்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News