Loading . . .




உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்யலாம்!

The Forecast 3 years ago நீதித்துறை

ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்திர ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஹேமலதா  அமர்வு தமிழக அரசு ஏன் ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை? என  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News