விடுதலை இராஜேந்திரன் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான 15 இலட்சம் பரிசு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
விடுதலை இராஜேந்திரன் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான 15 இலட்சம் பரிசு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (21.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் . விடுதலை இராஜேந்திரன் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை . விடுதலை இராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments