Loading . . .




பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கு புதியதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆய்வு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் / சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் .தா.உதயசூரியன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் .பொ.அர்ஜூனன், .கு.சின்னப்பா, .க.செல்வராஜ், .எஸ்.தங்கப்பாண்டியன், ஆ.மகாராஜன் ஆகியோர்  (21.12.2022) சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கு புதியதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உடன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்.எஸ்.சதாசிவம், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் .சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளனர்.


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News