Loading . . .




ராகுல் காந்தியின் பாரத் யாத்ரா தடுக்க கொரோனா.

The Forecast 3 years ago காங்கிரஸ்

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா விட்டால், பாத யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார். கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் பாத யாத்திரை நிறுத்தப்படாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது

ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர். நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி முக கவசம் அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தது குறித்து பதிலளித்த குர்ஷித், பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடக கலைஞர் என்று கூறியுள்ளார்

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News