Loading . . .




மூதறிஞர் இராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சி

The Forecast 3 years ago செய்தித்துறை

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை  (26.12.2022)  செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு.சிவ.சு.சரவணன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 செய்தித் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

1878-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் நாள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகிலுள்ள துரைப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்து, தமிழக மக்களால் மூதறிஞர் என்று அழைக்கப்பட்ட மரியாதைக்குரிய நினைவில் வாழக்கூடிய இராஜாஜி அவர்களுடைய 50ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவுக்கிணங்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூதறிஞர் இராஜாஜி அவர்களுடைய புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் சார்பில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இதன் அடிப்படையில் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் அரிய புகைப்படக் கண்காட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டு, இன்றைக்கு கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் எல்லாம் பார்வையிட்டு வருகிறார்கள். மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 50ஆவது ஆண்டு நினைவு என்கிற காரணத்தினால் தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. 

சேலம் நகராட்சியாக இருந்தபோது, நகராட்சித் தலைவராக தன்னுடைய அரசியல் வாழ்க்கை துவங்கி, பல்வேறு அரசுப் பொறுப்புகளில் குறிப்பாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புளை வகித்து மக்கள் பணியாற்றியவர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய வகையில் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அண்ணல் காந்தியடிகளின் ஒத்தழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் முன் நின்று நடத்தியவர். சுதந்திர போராட்ட தியாகியாகவும், அதற்காக சிறை சென்றவராகவும், மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கக்கூடிய புகழுக்குரிய சொந்தக்காரராக விளங்கியவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

அவருடைய புகழ் என்றைக்கும் தமிழக மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும், ஏன் அகில இந்திய அளவில் அவருடைய பெயர் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூதறிஞர் இராஜாஜி அவர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, அந்த வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்றைக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி : நடிகர் விஷால் சென்னையில் ஃபிலிம் சிட்டி இல்லை, தரமணியில் இருக்கின்ற ஃபிலிம் இன்ஸ்டீயூட் தரமாக இல்லை, அதைப்போல அந்த இன்ஸ்டீயூட்டை  மேம்படுத்தினால், நாங்கள் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்தாமல், தமிழ்நாட்டில் நடத்த முடியம் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.செய்தித்துறை அமைச்சரின் பதில் :

சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அதை இருக்கக்கூடிய பரப்பளவை வைத்து முடிந்த அளவு அதில் அடிப்படை தேவைகள் அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய வகையில், அதற்குரிய புனரமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இப்போது கூட சுமார் 5 கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினர் எதிர்பார்க்கக்கூடிய வகையில் முடிந்த அளவு அதில் அடிப்படை வசதிகளை செய்து தருவதுதான் அரசினுடைய நோக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

கேள்வி: அரசுக் கட்டிடங்கள் மற்றும் வாடகைக்கு விடப்படக்கூடிய அரங்கங்களக இருக்கட்டும், அதனை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் சேதத்தை ஏற்படுத்திவிட்டுப் போகிறார்கள். இதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.


0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News