Loading . . .




காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் மணிமண்டபத்தை அமைச்சர் . மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

The Forecast 2 years ago செய்தித்துறை

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  அவர்கள்  (15.05.2023) சென்னை, அண்ணாசாலை, கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் மணிமண்டபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.ஏ.எம் முஹம்மது அபுபக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் . மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் அமைந்துள்ள மரியாதைக்குரிய கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்களுடைய மணி மண்டபம் முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொழுது, 2001-ஆம் ஆண்டு கட்டுமானப் பணி துவக்கி வைக்கப்பட்டு, செய்தித் துறையில் உள்ளடக்கி பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே கூடுதலாக மேடை அமைக்க வேண்டும் என்றும் அதேபோல, பல்வேறு அடிப்படை பணிகளும் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வந்தது. அந்த அடிப்படையில் அதையும் ஆய்வு செய்து, நம்முடைய  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று, அந்தப் பணிகளை செய்வதற்கு செய்தி துறை நடவடிக்கை எடுக்கும். 

வருகிற ஜூன் திங்கள் ஐந்தாம் நாள் மரியாதைக்குரிய கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களுடைய பிறந்தநாள் வர இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில்  முதலமைச்சர் அவர்களே கலந்து கொண்டு மலர் மரியாதை செலுத்துகிறார். எனவே, அந்த வகையில், போற்றுதலுக்குரியவர், மனிதநேயமிக்கவர் அவருக்கு அரசின் சார்பிலே மரியாதை செய்கின்ற வகையில் இந்த பணிகளை செய்வதற்கு செய்தித் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News