அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தலைமைச்செயலகத்தில் வல்லுநர் குழுக் கூட்டம்
The Forecast 2 years ago செய்தித்துறை
தமிழ்த் தாயின் தவப்புதல்வர் கலைஞர் என்ற பொருண்மையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச்செயலகத்தில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர்கள் கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், கவிஞர் கவிதைப் பித்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி, கவிஞர் பா. விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments