Loading . . .




எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளனர். செய்த தவறுக்கு அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து, கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதும், எந்த முடிவுகளையும் யாரிடமும் கலந்தோசிப்பதும் இல்லை. தான் எடுப்பதுதான் இறுதியானது என்று நினைத்து வருகிறார்.

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு உயர் பதவியில் இருந்தவர், அது மட்டுமல்லாமல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் மாநில தலைவராக உள்ளவர் விமானத்தில் இதுபோன்று ஏராளமானோர் பயணம் செய்யும் இடத்தில் இவ்வாறு நடந்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடன் பயணம் செய்த பயணிகளின் உயிரோடு விளையாடுவதா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலை பாஜ தலைவராக வந்ததில் இருந்து தான் பாஜவில் ஆடியோ, வீடியோ கலாசாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News