Loading . . .




திமுக கட்டுப்பாட்டில் ஊடகங்கள்” - குற்றச்சாட்டுடன் வீடியோ பகிர்ந்த அண்ணாமலை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

திமுக கட்டுப்பாட்டில் ஊடகங்கள்” - குற்றச்சாட்டுடன் வீடியோ பகிர்ந்த அண்ணாமலை

திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம், திமுக கட்சி ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பது: "தமிழகத்தின் கெட்ட காலம் என்னவென்றால், காசிருக்கக் கூடியவர்கள் குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் ஒரு டிவி சேனல், தன்னால் முடிந்தவர்கள் ஒரு யூடியூப் சேனல் வைத்துக் கொள்கின்றனர். எல்லோருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு. கட்சிகளுக்கென்று சொந்தமாக ஒரு டிவி சேனல், ஒரு நியூஸ் பேப்பர் வைத்துள்ளனர்.

இதுபோன்றவர்கள் ஒரு கட்சியை, அதிலிருக்கக் கூடியவர்களை டார்கெட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக கட்சி ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News