பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்தசெவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் .டிடிவி தினகரன் ஆதரவு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக அமைப்பு செயலாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.V.சுகுமார் பாபு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
0 Comments