இடைத்தேர்தலில் பா.ஜ., தமாகா பின்வாங்கியது எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் போட்டியிடுவது உறுதி: இரட்டை இலைக்கு இருவரும் மோதுவதால் பரபரப்பு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
இடைத்தேர்தலில் பா.ஜ., தமாகா பின்வாங்கியது எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் போட்டியிடுவது உறுதி: இரட்டை இலைக்கு இருவரும் மோதுவதால் பரபரப்பு
விட்டு, தேர்தலில் போட்டியில்லை என்று முன் கூட்டியே அறிவித்து விட்டார். அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பாஜ மாநில தலைமையை அகில இந்திய தலைமை கேட்டுக் கொண்டது.. இன்று மாலை 4 மணிக்கு தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை எடப்பாடி அணியினர் சந்தித்து ஆதரவு கேட்கின்றனர். அப்போது அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது இருப்பது ஓ.பன்னீர்செல்வம்தான். அவர் கடிதம் கொடுத்தால்தான் இரட்டை இலை கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் அவரிடம் பாஜ தலைவர்கள் மூலம் பேசி, தேர்தல் ஆணையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடிதான் என்பதற்கான உத்தரவை வாங்கித் தரும்படி எடப்பாடி கூறி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, என்னை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால், நான் கடிதம் கொடுக்கிறேன்என்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை. இதனால், அண்ணாமலை ஒதுங்கிக் கொண்டார்.
இதனால் அதிமுகவில் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடிதம் கொடுத்து அவரது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று காலையில் அவர் அறிவிக்கிறார். அப்போது பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டு தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும். அல்லது அவருக்கு கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி தேர்தல் ஆணையத்தில் முறையிட வேண்டும்.
அப்படி செயல்பட்டால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும். இதனால் சின்னத்தை முடக்கியதற்கான பழி எடப்பாடி மீது விழும். இதனால் இடியாப்ப சிக்கலில் எடப்பாடி மாட்டியுள்ளார். ஆனாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். சின்னத்திற்கு பாஜ உதவ வேண்டும் என்று கேட்டு வருகிறார். ஆனால் பாஜ கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி அணி முடிவு செய்துள்ளது.
*அதிமுகவில் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில், ஓபிஎஸ்சும் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி இரட்டை இலை சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். இதனால் எடப்பாடி தேர்தல் ஆணையத்தில் முறையிட வாய்ப்பு உண்டு. அப்படி செயல்பட்டால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும். இதனால் சின்னத்தை முடக்கியதற்கான பழி எடப்பாடி மீது விழும். இதனால் இடியாப்ப சிக்கலில் எடப்பாடி மாட்டியுள்ளார்.
0 Comments