காந்தி மண்டபம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் செய்தித் துறை அமைச்சர் . மு. பெ.சாமிநாதன்
The Forecast 3 years ago செய்தித்துறை
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி மண்டபம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அயோத்திதாசப் பண்டிதர் நினைவு மண்டபம் பணிகள், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் தியாகச் சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகள், ஆகிய பணிகளை இன்று (24.01.2023) செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ,ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 Comments