Loading . . .




இந்தி என்ற ஒரே மொழியை திணித்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜ: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்



‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் சிந்தனையானது, இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி வருகிறது. நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக, திமுக தலைமைப் பொறுப்புக்கு வந்த நான் - இன்று திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றது, எனது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெருமையாக கருதுகிறேன். சர்.பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார், பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் - ஆகியோரின் சிந்தனைகளையும் கனவுகளையும் நிறைவேற்றித் தரும் வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.


ஊருக்கு உழைத்தல் யோகம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், ஊருக்கு உழைத்தலே தியாகம். ஊருக்கு உழைத்தது மட்டுமல்ல - உயிரையே தந்திருக்கும் தியாகிகளின் நினைவுநாளில் அந்த தியாகிகளைப் போற்றும் அதேவேளையில்- அவர்கள் உருவாக்க நினைத்த தமிழ்நாட்டுக்கு எந்நாளும் உழைப்போம்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட செயலாளர் சந்திரன், கோவிந்தராஜன், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


* இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்திமொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே  வைத்துள்ளது.

* ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பதுவரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.

* ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு - என்ற வரிசையில், ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News