தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரயிலில் வேலூர் பயணம்
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (1.02.2023) வேலூர் மாவட்டம், காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, வேலூர் மாவட்டத்தின் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்ட இரயிலில் பயணம், இரயில் பெட்டியே அலுவலகம் ஆனது. உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு..
0 Comments