Loading . . .




கும்பகோணம் நீதிமன்றத்தில் நேஷனல் லோக் அதாலத்'

Arut Selvan 3 years ago நீதித்துறை

11.2.2023: தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்களின் தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்களின் ஆணைப்படியும் மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதி அவர்களின் அறிவுரைகளின்படி 11-02-2023 சனிக்கிழமை அன்று காலை 10-மணிக்கு கும்பகோணம், திருவிடைமருதூர் நீதி மன்றங்களில் "இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடு தழுவிய நேஷனல் லோக் அதாலத்' என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் . எஸ்.சண்முகவேல் கூடுதல் மாவட்ட நீதிபதி,  ஏ.புவியரசு முதன்மை மாவட்ட உரிமையியல்நீதிபதி,  .சு.மாதவன் வழக்கறிஞர் பங்கேற்பிலும்

இரண்டாவது அமர்வில்,  .D.சண்முகபிரியா தலைமை குற்றவியல் நீதித்துறை‌நடுவர்,.    .ஏ.வெங்கடேசபெருமாள் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி,  ஆ.ரகுவீரன் வழக்கறிஞர் பங்கேற்பிலும் நடைபெற்றது. அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் சிவபழனி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர், ஆ.ளு.பாரதிதாசன் நீதித்துறை நடுவர் எண்.1 வழக்கறிஞர் .மு.மோகன்ராஜ் பங்கேற்பில் மொத்தம் 753 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக, இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு

492 வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது அதில் ரூ.29950717.00

அதில் 14 காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ.4138639.00

95 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் மூலம் ரூ 11258478.00 கடன்தொகை பாக்கி நிறைவேற்று வழக்கின் மூலம் 97 என ரூ.3408084.00 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக அலுவலர்  M.சுதர்சனன், சட்ட தன்னார்வ தொண்டர் குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்தனர்.

2 Comments

Good 👍

Meera

3 years ago

Good 👍

Meera

3 years ago

Post your comment here

நீதித்துறை Relateted News