Loading . . .




விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க முடியுமா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

The Forecast 3 years ago நீதித்துறை

விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க முடியுமா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா உள்ளிட்டோர் தாக்கல் செய்ய பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியுமா? என கேட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News