அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்கு- சிபிஐ நடவடிக்கை
The Forecast 3 years ago நீதித்துறை
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என்.சுக்லா மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செயதுள்ளது. 2014-19 காலகட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக அவர் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.45 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இது அவருக்கு எதிரான இரண்டாவது ஊழல் வழக்கு ஆகும். இதற்கு முன் 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஒரு ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது. எஸ்.என்.சுக்லா 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments