நாகூர் தர்கா புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய்- அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
தொன்மையான தேவாலயங்கள் மற்றும் தர்காக்கள் பழுது பார்க்கப்படும் பொருட்டு பெருமராமத்து மானியம் 2 கோடி ரூபாய் வீதம் வழங்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்
வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் 20.03.2023 அன்று தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு
வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள்
நாகூர் தர்கா புனரமைப்பு பணிகளுக்காக
2 கோடி ரூபாய் அரசின் மானியத்தை விடுவிப்பதற்கான
ஆணைகளையும், அதன் முதல் தவணையாக70 விழுக்காட்டிற்கான காசோலையையும் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் டாக்டர் எஸ். செய்யது காமில் சாஹிப், நாகூர் தர்கா
தலைவர் எஸ்.செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் .ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார். இந்நிகழ்வில், தமிழ்நாடு
வக்ஃபு வாரியத் தலைவர் திரு.அப்துல்ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினரும்
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் உறுப்பினருமான திரு.ஜெ.முகமது ஷா நவாஸ், வக்ஃபு வாரிய
உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் திரு.எ.பி.ரஃபியுல்லா மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments