Loading . . .




1000 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள்.

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிகளை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் . உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  பார்வையிட்டார்.

    தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகமான “கலைஞர் அறிவாலயம்” கும்பகோணம் மேம்பாலம் அருகே கட்டப்பட்டு வருகிறது. 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .  அவர்கள் அண்மையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.  அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை நேரில் பார்வையிட்டார்.

மேலும் கும்பகோணத்தில், தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களும், கழக சட்டமன்ற உறுப்பினர் . அன்பழகன் அவர்களின் பெற்றோருமான, அய்யா கே.கணபதி-ஏகாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்திய பின்னர் அவர்களின் பெயரிலான நூலகத்தை பார்வையிட்டார். 

  அங்கிருந்து திருவாரூர் சென்ற  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், திருவாரூரில் நடைபெற்ற மாணவப்பருவம் தொட்டே முத்தமிழறிஞரின் உற்ற நண்பர், ஆரம்ப காலம் முதலேமாணவர் மன்றம்-மாணவர் நேசன்- முரசொலி - கழகம் என முத்தமிழறிஞரின் அத்தனை பயணங்களிலும் உடன்நின்று கலைஞரின் இதழியல்,இயக்க அரசியல் பணிகளில் தோளோடு தோள் நின்று உழைத்த திருவாரூர் மண்ணின் மைந்தர் கு.தென்னன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர்களின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூரில் நடைபெற்ற மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1000 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000  பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  இந்நிகழ்ச்சிகளில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர்  அன்பில். மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,  உணவுப்பொருள் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் . அர. சக்கரபாணி அவர்கள்,  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை 

அமைச்சர். . சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள்,  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி 

. ஏ.கே. எஸ். விஜயன் அவர்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக தலைவர் உ.மதிவாணன் அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்  கல்யாணசுந்தரம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன் (கும்பகோணம்) . பூண்டி. கே. கலைவாணன், (திருவாரூர்), . டி.ஆர்.பி ராஜா, (மன்னார்குடி) உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News