காகிதம் இல்லா பேரவையின் ஒரு பகுதியாக எம்எல்ஏக்கள் பேசுவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் தொடுதிரை கணினியில் பார்க்கலாம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முழுமையாக காகிதமில்லா சட்டமன்றமாக மாற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக டிஜிட்டல் ஹவுஸ் திட்டத்தினை இன்று (நேற்று) முதல் செயல்படுத்தியுள்ளோம். அந்த வகையில் உறுப்பினர்களின் மேஜைகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள தொடுதிரை, சிறு கணினிகளில் மின் புத்தகம் இ-புக் என்ற செயலி உருவாக்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மின் புத்தகத்தினை பயன்படுத்துவதற்காக பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவை அனைத்து உறுப்பினர்களுக்கும் உருவாக்கப்பட்டு ஏற்கனவே தொடுதிரை சிறு கணினிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உறுப்பினர்கள் மின் புத்தகத்தில் உள்ளவற்றை காணலாம்.மேலும் பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதலும் செயல்பாட்டுக்கு வருகிறது. முதல் கட்டமாக வினாக்கள்-விடைகள் நேரத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றிய விவரம், ஹவுஸ் கண்ட்ரோலர் போர்டு மற்றும் டிஸ்ப்ளே யூனிட் மூலம் உரையாற்றும் உறுப்பினர் பெயர், புகைப்படம், உரையாற்றும் நேரம் உள்ளிட்டவற்றை தொடுதிரை கணினியிலும், பெரிய திரைகளில் காண முடியும். வினாக்கள் விடைகள் நேரத்தில் நேரடி ஒளிபரப்பினை லைவ் ஸ்டீரிமிங் என்ற முறையில் உறுப்பினர்கள் தங்கள் தொடு திரையில் நேரடியாக காணலாம்.
0 Comments