வருமான வரி சோதனையில் ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்படவில்லை - ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்
The Forecast 2 years ago அரசியல் செய்திகள்
வருமான வரித்துறை சோதனையில் ரூ.3.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம் என்றும், எங்கள் நிறுவனத்துக்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை தொடர்பாக அந்த நிறுவன மேலாண் இயக்குநர் பாலா என்ற ராமஜெயம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளில் தகவல்கள், விளக்கங்கள் கோரும் வகையில், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கமான நடவடிக்கைதான். நாடு முழுவதும் கடந்த சில மாதங்களில் இத்தகைய சோதனைகளை வருமான வரித்துறையினர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடத்தியுள்ளனர்
அந்த வகையில், கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். நாங்கள், அவர்கள் கோரிய எங்களது தற்போதைய கட்டுமானத் திட்டங்கள், வருவாய் தொடர்பான எங்களது ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் அளித்துள்ளோம். எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முழுமையாக இந்திய வருமான வரி மற்றும் பொருளாதார சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
0 Comments