உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்பு
The Forecast 2 years ago நீதித்துறை
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா நியமிக்கப்பட்டு, அவரும் கடந்த புதன்கிழமை ஓய்வு பெற்றார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 2-ஆவது மூத்த நீதிபதியான
எஸ்.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொழிற்சங்கவாதியான தந்தை வி.சுப்பிரமணியனின் பிறந்த தின நூற்றாண்டில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணிகளைத் தொடங்கியதில் மகிழ்ச்சி என்று பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.
0 Comments