Loading . . .




சென்னை ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் பணிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, கோட்டூர்புரம், காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுபணிகளை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிருவாக ஆணையாளர் .பி.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள்  ஷரண்யா அறி, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள், எம்.பி.அமித், இ.ஆ.ப.,(தெற்கு வட்டாரம்) அவர்கள், மாமன்ற உறுப்பினர்  து.சுஹாசினி அவர்கள், தலைமைப் பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News