டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழங்குவதை விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு: நீதிபதிகள் வேதனை
The Forecast 2 years ago நீதித்துறை
டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழங்குவதை விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு குறைவான நிதியையே ஒன்றிய அரசு ஒதுக்குகிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட நீதிபதிகளின் ஊதியத்தைக் காட்டிலும் தலைமை எழுத்தரின் ஊதியம் அதிகமாக உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆன்லைன் மூலம் வழக்கு தொடர்பாக ஆலோசிக்கும் முறையை கொண்டு வர நவீன வசதிகள் தேவை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கு தொடர்பாக வழக்கறிஞர், கைதியுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசிக்க அனுமதி பற்றி சிறைத்துறை தலைவரிடம் விளக்கம் பெற உத்தரவு அளித்துள்ளனர்.ஊதியக்குழு பரிந்துரைகள் மாநில அரசு இதுவரை நடைமுறைப்படுத்ததால் ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஊதியக் குழுவின் திருத்தப்பட்ட பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Please change the photo
Palanisamy R
2 years ago